search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முளைக்கட்டிய பச்சைப்பயறு - சிகப்பு அரிசி புட்டு
    X

    முளைக்கட்டிய பச்சைப்பயறு - சிகப்பு அரிசி புட்டு

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த பச்சைப்பயறு - சிகப்பு அரிசி புட்டு மிகவும் நல்லது. இந்த புட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிகப்பு அரிசி மாவு -  ஒரு கப்,
    முளைக்கட்டிய பச்சைப்பயறு  - கால் கப்,
    தேங்காய்த் துருவல்  - சிறிதளவு,
    உப்பு  - தேவைக்கு.



    செய்முறை :

    சிகப்பு அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசறி கொள்ளவும்.

    புட்டு அச்சில் முதல் மாவை சிறிதளவு போட்டு அடுத்து முளைக்கட்டிய பச்சைப்பயறு போட்டு அதற்கு மேல் தேங்காய் துருவல் போடவும். இது போல் மாவு  அனைத்திலும் செய்யவும்.

    புட்டு அச்சை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான முளைக்கட்டிய பச்சைப்பயறு - சிகப்பு அரிசி புட்டு ரெடி.

    குழந்தைகளுக்கு சர்க்கரை போட்டு கொடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×