search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவல் - முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்
    X

    அவல் - முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்

    தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று அவல், முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அவல் - ஒரு கப்,
    முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
    கேரட் துருவல் - கால் கப்,
    மாதுளை முத்துக்கள் - கால் கப்,
    வெங்காயம் - ஒன்று,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு, எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு.

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சைப்பயறை ஆவியில் வேக விட்டு எடுத்து கொள்ளவும்.

    அவலை களைந்து இரண்டு நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் அவல், பச்சைப்பயறு, கேரட் துருவல், மாதுளை முத்துக்கள், வெங்காயம், உப்பு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சத்தான அவல் - முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் ரெடி.

    எண்ணெய் இல்லாமல் எளிதில் செய்து விடலாம். மிகவும் சத்தானது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×