search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு வலுசேர்க்கும் முள்ளங்கி சூப்
    X

    உடலுக்கு வலுசேர்க்கும் முள்ளங்கி சூப்

    தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முள்ளங்கி சூப் குடிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி - ஒன்று,
    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    முள்ளங்கி வெந்தவுடன் ஆற வைத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய சாறுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகலாம்.

    சூப்பரான சத்தான முள்ளங்கி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×