search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதானவர்களுக்கு சத்தான திணை உசிலி
    X

    வயதானவர்களுக்கு சத்தான திணை உசிலி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணையை வைத்து உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    திணை அரிசி  - ஒரு கப்,
    பாசிப்பருப்பு  - கால் கப்,
    சீரகம்   ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு,

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் -  4.



    செய்முறை:

    பாசிப்பருப்பு, திணை அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் இதனுடன் அரிசி, பருப்பு, உப்பு, 4 கப் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து பார்த்தால் உதிர் உதிராக வரும்.

    சூப்பரான திணை உசிலி ரெடி. சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×