search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பரான பிரண்டை பொடி
    X

    இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பரான பிரண்டை பொடி

    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள பிரண்டை பொடி சூப்பராக இருக்கும். இன்று இந்த பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - ஒரு கப்,
    உளுத்தம் பருப்பு - ஒரு கப்,  
    கருப்பு எள் - ஒரு கப்,
    இளம் பிரண்டை துண்டுகள் - ஒரு கப்,
    கறிவேப்பிலை - கைப்பிடியளவு,
    தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு,
    உப்பு - தேவையான அளவு,
    புளி - கோலியளவு.



    செய்முறை :

    தேவையான பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் பவுடராக பொடிக்கவும்.

    அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

    சூப்பரான பிரண்டை பொடி

    இந்த பொடியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×