search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்று கோளாறுகளை போக்கும் பிரண்டை சாதம்
    X

    வயிற்று கோளாறுகளை போக்கும் பிரண்டை சாதம்

    வயிற்று கோளாறு, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று பிரண்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டை - 1/2 கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 4,
    புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க...

    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    நெய் - 1 டீஸ்பூன்.
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    பிரண்டையை ஓரத்தில் இருக்கும் நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் தேங்காய்த் துருவல், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, புளியை தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும்.

    பிரண்டையை தனியாக எண்ணெயில் முறுவலாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

    வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் சாதம், பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து, கறிவேப்பிலையை தூவி, பரிமாறவும்.

    பிரண்டை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×