search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்று கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி சட்னி
    X

    வயிற்று கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி சட்னி

    கொத்தமல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இன்று கொத்தமல்லியை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
    தேங்காய் - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 5,
    உப்பு - தேவையான அளவு,

    தாளிக்க :

    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை  :

    கொத்தமல்லித்தழையை நன்கு நீரில் கழுவி வைக்கவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொத்தமல்லியை போட்டு சிறிதளவு வதக்கிக் கொள்ளவும்.

    மிக்சியில் துருவிய தேங்காய், வதக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைப் போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள விழுதில் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான கொத்தமல்லி சட்னி ரெடி.

    தாளிக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×