search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இருமலுக்கு இதமான ஓமவல்லித் துவையல்
    X

    இருமலுக்கு இதமான ஓமவல்லித் துவையல்

    நெஞ்சுச் சளி, இருமல், வாய்க்கசப்பு, வயிறு தொடர்பான நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது ஓமவல்லி. இன்று இதை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓமவல்லி இலை - 25,
    புதினா  - ஒரு கைப்பிடி,
    புளி  - சிறு உருண்டை,
    காய்ந்த மிளகாய்  - 4,
    உளுந்தம்பருப்பு  - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பூண்டு  - 8 பல்,
    உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு.

    செய்முறை :

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பை சேர்த்து வதக்கிய பின்னர், அதில் ஓமவல்லி, புதினாவையும் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

    அனைத்தும் ஆறியவுடன் அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

    பூண்டு வாசனை பிடிக்காதவர்கள், பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்தான சுவையான ஓமவல்லித் துவையல்

    சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட ஏற்ற சுவையான, சத்தான துவையல்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×