search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஆரோக்கியமான முளைக்கீரை கட்லெட்
    X

    சத்தான ஆரோக்கியமான முளைக்கீரை கட்லெட்

    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிட அடம் பிடிப்பார்கள். வித்தியாசமான முறையில் கீரையை உணவாக செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இன்று கீரையில் கட்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    முளைக்கீரை - 1 கட்டு
    கடலை மாவு - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
     
    * கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
     
    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
     
    * குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கீரை, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி கீரையில் இருக்கும் நீரை வடிகட்டி விட்டு கீரையை மட்டும் தனியாக வைக்கவும்.
     
    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, வேண்டுமென்றால் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதோடு கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
     
    * பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
     
    * அடுப்பில் இந்த கலவையை வைத்து (மிதமான தீயில்) கிளறி அத்துடன் கீரையையும் சேர்த்து நன்கு கிளறவும்.
     
    * இந்த கீரை கலவையானது சுருண்டு வரும் போது அதனை இறக்கி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
     
    * பின் ஆறியதும் துண்டாக வெட்டி அதனை அப்படியே சாப்பிடலாம்.  

    * மிகவும் சத்தான, ஆரோக்கியமான முளைக்கீரை கட்லெட் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×