search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதானர்களுக்கு சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி
    X

    வயதானர்களுக்கு சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான சுவையான முளைகட்டிய பயறு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    முளை கட்டிய பாசிப்பயறு - அரை கப்,
    தேங்காய் துருவல் - அரை மூடி,
    தனியாத்தூள் - 4 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    வெங்காயம் - 2
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    தண்ணீர் - ஒன்றரை கப்,
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 8,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரியை வறுத்து கொள்ளவும்.

    குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் அரிசியைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    அதில் முளைகட்டிய பயறு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி வேக விடவும்.

    இரண்டு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.

    சூப்பரான சத்தான முளைகட்டிய பயறு கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×