search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான வேர்க்கடலை - உருளைக்கிழங்கு கட்லெட்
    X

    சத்தான வேர்க்கடலை - உருளைக்கிழங்கு கட்லெட்

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான வேர்க்கடலை - உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த வேர்க்கடலை - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் துண்டுகள் - 3,
    பச்சைமிளகாய் - 4,
    இஞ்சி - ஒரு துண்டு,
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி,
    பிரெட் தூள் - ஒரு கப்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.

    வேர்க்கடலையை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும்.

    பிரெட் துண்டுகளை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்துப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

    இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, வைக்கவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

    வேர்க்கடலை - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×