search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ
    X

    கொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ

    பட்டை டீ குடிப்பதால் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறையும். இதய நோய்கள் வராமல் காக்கும். இந்த டீயை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    கிரீன் டீ - 2 டீஸ்பூன்,
    பட்டைப்பொடி - கால் டீஸ்பூன்,
    தேன் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் 8 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

    நனறாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும்.

    விருப்பப்பட்டால், பால் சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×