search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேரளா ஸ்டைல் சிவப்பு அரிசி - மொச்சை கஞ்சி
    X

    கேரளா ஸ்டைல் சிவப்பு அரிசி - மொச்சை கஞ்சி

    இது சிவப்பு அரிசி, பச்சரிசி மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் ஒரு ஆரோக்கியமான சுவையான கஞ்சி. இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேரளா சிவப்பு அரிசி - 1/2 கப்
    பச்சரிசி - 1/2 கப்
    மொச்சை - 1/4 கப்
    தேங்காய் பால் - 2 கப்
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    தண்ணீர் - 3 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    மொச்சையை பொன்னிறமாக வறுத்து, சுடுநீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் அதனை போட்டு, வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு பச்சரிசி, சிவப்பு அரிசியை குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் விட்டு இறக்கி, மசித்துக் கொள்ள வேண்டும்.

    மசித்த அரிசியில் தேங்காய் பால் சேர்த்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்ட பின் மொச்சையை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கி பரிமாறவும்.

    கேரளத்து சிவப்பு அரிசி - மொச்சை கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×