search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான சிவப்பு அரிசி புட்டு
    X

    சத்தான சுவையான சிவப்பு அரிசி புட்டு

    சிவப்பு அரிசியில் இட்லி, தோசை, அடை, புட்டு, கொழுக்கட்டை, கூழ் போன்றவற்றை ருசியாக செய்யலாம். இன்று சிவப்பு அரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - 100 கிராம்,
    சிவப்பு அவல் - 100 கிராம்,
    துருவிய தேங்காய் - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு - தலா 25 கிராம்,
    ஏலக்காய் தூள் - சிறிதளவு.

    செய்முறை:

    கழுவி காயவைத்த சிவப்பு அரிசியுடன், அவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய தேங்காய் சேர்த்து உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.

    வெந்த புட்டு கலவையில் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் மற்றும் பொடித்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சத்தான சுவையான சிவப்பு அரிசி புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×