search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் சிவப்பு அவல் கொழுக்கட்டை
    X

    சத்தான டிபன் சிவப்பு அவல் கொழுக்கட்டை

    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலை வைத்து சத்து நிறைந்த கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - 2 கப்
    தேங்காய்த்துருவல் - 1 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கேற்றவாறு

    செய்முறை :


    அவலை கழுவி விட்டு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். தண்ணீர் அவல் மூழ்கும் அளவிற்கு விட்டால் சரியாக இருக்கும். ஊறிய அவலில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.   

    ஒரு சிறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்த பின் பிசைந்து வைத்துள்ள அவலில் கொட்டவும்.  

    அடுத்து அதில் தேங்காய்த்துருவலையும் சேர்த்து மீண்டும் நன்றாகப் கிளறி விடவும்.

    எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து ஓவல் வடிவில் கொழுக்கட்டையாகப் பிடித்து, இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் 8 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

    சத்து நிறைந்த சிவப்பு அவல் கொழுக்கட்டை ரெடி.

    சட்னியுடன் பரிமாறவும். இட்லி மிளகாய்ப் பொடியுடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×