search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை
    X

    சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை

    காய்கறிகள் சேர்த்து செய்யும் இந்த கொழுக்கட்டையை காலை உணவாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு -  ஒரு கப்,
    முட்டைகோஸ் துருவல் - சிறிய துண்டு,
    கேரட் துருவல் - 2,  
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 1,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு.. சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து சுருள கிளறவும்.

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம்.

    கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் இந்த பூரணம் வைத்து மூடவும். அவைத்து மாவிலும் இதை செய்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து செய்து வைத்த கொழுக்கட்டைகளை அதில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான மாலை நேர டிபன் வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×