search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான குதிரைவாலி இடியாப்பம்
    X

    சத்தான சுவையான குதிரைவாலி இடியாப்பம்

    கோதுமையைவிட ஆறு மடங்கு அதிக நார்ச்சத்து குதிரைவாலியில் இருக்கிறது. இன்று குதிரைவாலி அரிசியில் எப்படி இடியாப்பம் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - அரை கிலோ,
    உப்பு - ஒரு தேக்கரண்டி,
    நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
    தேங்காய்த்துருவல் - கால் கப்,
    நாட்டுச் சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி.

    செய்முறை:

    * குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு நிழலில் ஆறவிட்டு மெஷினில் கொடுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும்.

    * இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார்.

    * வெல்லம், தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×