search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான மாலை நேர டிபன் ஓட்ஸ் கார பணியாரம்
    X

    சத்தான மாலை நேர டிபன் ஓட்ஸ் கார பணியாரம்

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து சத்தான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 டம்ளர்
    பச்சரிசி மாவு - 1 டம்ளர்
    ரவை - 1/4 கப்
    தயிர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1/2 இணுக்கு
    பெருங்காயம் - சிறிதளவு
    வெங்காயம் - 2.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.

    * அரைத்த ஓட்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுப்பில் குழிப்பணியாரச்சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான ஓட்ஸ் கார பணியாரம் தயார்.

    * மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×