search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான காலை உணவு அவல் பொங்கல்
    X

    சத்தான காலை உணவு அவல் பொங்கல்

    காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 1/2 டம்ளர்
    பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    கொத்தமல்லி - அலங்கரிக்க

    தாளிக்க :

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    நெய் - 2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 இணுக்கு.



    செய்முறை :

    * இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் நன்றாக பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

    * பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்ட தாளித்து பின்னர் அவல் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.

    * பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    கூடுதல் குறிப்புகள்:

    * திடமான அவலைப் பயன்படுத்த வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×