search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் திணை சீரக தோசை
    X

    சத்தான டிபன் திணை சீரக தோசை

    தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று திணை அரிசியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    திணை - ஒரு கப்
    அரிசி மாவு - கால் கப்
    தயிர் - ஒரு கப்
    தண்ணீர் - 2 கப்
    மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    சீரகம் - அரை தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    வெங்காயம் - 2

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 2



    செய்முறை :

    * இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * திணை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடி பண்ணிய திணை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    * கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.

    * கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

    * தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

    * சத்தான டிபன் திணை சீரக தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×