search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேழ்வரகு - பீட்ரூட் தோசை
    X

    சத்து நிறைந்த கேழ்வரகு - பீட்ரூட் தோசை

    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, பீட்ரூட் வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - கால் கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3,
    எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் வைக்கவும்.

    * வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சத்து மிகுந்த கேழ்வரகு - பீட்ரூட் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×