search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி
    X

    குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி

    தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி மாவு   -  கால் கப்
    உருளைகிழங்கு - 1
    பட்டாணி - கால் கப்
    ஸ்வீட் காரன் - கால் கப்
    கேரட் - 1
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    சீரகபொடி  - 1 ஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிது
    பிரட் தூள் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    * காய்கறிகளை (கேரட், உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன், பட்டாணி) பொடியாக நறுக்கி குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    * ராகி மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்து இருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சீரகத்தூள், மிளக்காய் பொடி, உப்பு போட்டு வதக்கி மசித்து விடவும்.

    * கலவை ஆறிய பின் ராகி மாவு போட்டு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும் கலவையில் சிறிது உருண்டை எடுத்து வட்ட வடிவமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.

    * ஒரு தவாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டிக்கிகளை அடுக்கி வைத்து பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.

    * சூப்பரான ராகி டிக்கி ரெடி.

    * வெளியில் கிரிஸ்பி ஆகவும் உள்ளே soft ஆக மிகவும் ருசியாக இருக்கும் இந்த டிக்கி குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி சாஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×