search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான காலை டிபன் அரிசி உப்புமா கொழுக்கட்டை
    X

    சத்தான காலை டிபன் அரிசி உப்புமா கொழுக்கட்டை

    திடீர் விருந்தினர்களைச் சமாளிக்கவும் பள்ளி, கல்லூரி சென்று சோர்வாக வரும் பிள்ளைகளையும் அசத்த அருமையான சிற்றுண்டி இது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 டம்ளர்
    தேங்காய் - கால் மூடி
    கடுகு - 1 டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
    வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 2
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    பெருகாயம் - சிறிதளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    * பச்சரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

    * அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் அதிகம் சேர்க்கவோ மையாக அரைக்கவோ வேண்டாம், நறநற பதம் போதும்.)

    * வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து விட்டு அரைத்த அரிசியைச் சேர்க்கவும்.

    * அதனுடன் பாதி தேங்காய்த்துருவலையும் சேர்க்க வேண்டும்.

    * கைவிடாமல் கிளற வேண்டும். உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும்.

    * உதிரியாக வந்தவுடன் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும்.

    * இட்லிக்குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

    * கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.

    * அரிசி உப்புமா கொழுக்கட்டை ரெடி.

    * அதை சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×