search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோயா - தக்காளி சூப் செய்வது எப்படி
    X

    சோயா - தக்காளி சூப் செய்வது எப்படி

    தினமும் ஏதாவது சூப் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைக்கும். இன்று சோயா, தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 3,
    பீட்ரூட் - 1 துண்டு
    சோயா - 4 டீஸ்பூன்,
    சோள மாவு - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வெண்ணெய் - சிறிதளவு.



    செய்முறை :

    * சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    * தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

    * அரைத்த கலவையை ஒரு கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் சோயா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * கரைத்த சோள மாவை சூப்பில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான சோயா - தக்காளி சூப் ரெடி.

    * சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, அதில் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×