search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு போளி
    X

    குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு போளி

    குழந்தைகளுக்கு அடிக்கடி கேழ்வரகு உணவை கொடுப்பது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று சத்தான கேழ்வரகு போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 50 கிராம்
    பொடித்த வெல்லம் - 10 கிராம்
    துருவியத் தேங்காய் - 20 கிராம்
    தண்ணீர் - சிறிதளவு
    நெய்/தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * ராகிமாவில் தண்ணீர், உப்பைச் சேர்த்து போளி பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.

    * பின்னர் அதனுடன் தேங்காய், வெல்லத்தைச் சேர்த்து நன்கு பிசையவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக்கி அவற்றை உள்ளங்கையில் வைத்து வட்டமாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு போளி ரெடி.

    * சூடு ஆறியதும் குழந்தைகளுக்குப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×