search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி
    X

    சத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி

    குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும். அவர்களுக்கு காய்கறிகளை சேர்த்து கஞ்சி போல் செய்து கொடுத்தால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - ஒன்று
    பீன்ஸ் - 5
    முட்டைக்கோஸ் - சிறிய துண்ட
    பெங்களூரு தக்காளி - சிறியது 1
    துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
    தண்ணீர் - 100 மில்லி.



    செய்முறை :

    * கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

    * இதேபோல் பருப்பையும் தனியாக நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும்.

    * வெந்த பருப்பை நன்றாக மசித்து அதை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் மிளகுத்தூள், போதுமான உப்பு சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும், அல்லது மிக்ஸியில் லேசாக அரைக்கவும்.

    * இப்போது சத்தான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி தயார்.

    குறிப்பு:

    பருப்புக்குப் பதில் வெந்த சாதம் அல்லது கோதுமைக் கஞ்சி சேர்த்துக் கடைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×