search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பீட்ரூட் சோள மாவு ரொட்டி
    X

    சத்தான பீட்ரூட் சோள மாவு ரொட்டி

    சப்பாத்தி, ரொட்டி செய்யும் போது அதனுடன் காய்கறிகளை சேர்த்து செய்து கொடுத்தால் உடலுக்கு நல்லது. இன்று பீட்ரூட் சோள மாவு வைத்து ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 150 கிராம்
    சோள மாவு - 50 கிராம்
    மீடியம் சைஸ் பீட்ரூட் - 1
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - மாவு பிசைய
    எண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    * பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து அதில் உள்ள ஈரம் வற்றி வெந்தவுடன் இறக்கி ஆற வைக்கவும்.

    * கோதுமை மாவு, சோள மாவைச் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், வதக்கிய பீட்ரூட், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    * பின்னர் அதில் தேவையான தண்ணீர் விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.

    * மாவை மீடியம் சைஸ் உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சத்தான பீட்ரூட் சோள மாவு ரொட்டி ரெடி.

    * இதை ரைத்தா மற்றும் ஊறுகாயோடு சேர்த்துப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×