search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கம்பு முட்டை ரொட்டி
    X

    சத்து நிறைந்த கம்பு முட்டை ரொட்டி

    சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு முட்டை ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 100 கிராம்
    கோதுமை மாவு - 50 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் - மாவு பிசைய
    எண்ணெய் - சிறிதளவு

    முட்டை மிக்‌ஸர் :

    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மிருதுவாகும் வரை பீட்டரால் அடித்துக் கலக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்துக் கலக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் கம்பு, கோதுமை மாவுகளை சலித்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    * அடுத்து அதில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரைச் சேர்த்து ரொட்டி பதத்துக்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடம் மூடி போட்டு தனியாக வைக்கவும்.

    * அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும்.

    * மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிரிக்கவும். எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது எண்ணெய் தடவிய வாழை இலையில், மாவு உருண்டையை வைத்து விரல்களால் நன்கு வட்டமாக சற்று தடிமனாக தட்டவும்.

    * தவாவில் ரொட்டியை வைத்து முட்டைக் கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ரொட்டியின் மீது ஸ்பூனால் நன்கு பரப்பி விடவும். ரொட்டியைச் சுற்றியும், மேலேயும் லேசாக எண்ணெயைத் தெளித்து விடவும்.

    * ஒரு புறம் வெந்ததும் ரொட்டியைத் திருப்பி போட்டு மறுபுறம் வேக விடவும்.

    * எண்ணெயைச் சிறிது தெளித்து விடவும். வெந்ததும் எடுத்து பூண்டு சட்னி அல்லது ஆனியன் ரைத்தாவோடு பரிமாறவும்.

    * சூப்பரான சத்தான கம்பு முட்டை ரொட்டி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×