search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த அவகேடோ - கார்ன் சூப்
    X

    சத்து நிறைந்த அவகேடோ - கார்ன் சூப்

    உடலில் உள்ள தேவைற்ற கொழுப்பை குறைக்கும் சக்தி அவகேடோவிற்கு உள்ளது. இன்று அவகேடோ, கார்ன் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகேடோ - ஒன்று,
    உதிர்த்த ஸ்வீட் கார்ன்  - ஒரு கப்,
    பூண்டு - 2 பல்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், வெண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * அவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.

    * பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில்... அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

    * கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த அவகேடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும். 6 முதல் 8 நிமிடம் கொதித்தால் போதுமானது.

    * கடைசியாக இறக்கும் போது அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான அவகேடோ - கார்ன் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×