search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சாண்ட்விச்
    X

    சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சாண்ட்விச்

    முட்டைக்கோஸ் மூட்டு வலி பிரச்சனைகள், அல்சர், உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இன்று முட்டைக்கோஸை வைத்து சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    தக்காளி சாஸ் - 4 டீஸ்பூன்
    கோதுமை பிரட் துண்டுகள் - 8
    வெங்காயம் - 1
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * முட்டைக்கோஸை மிகப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நீரில் கழுவியபின்பு இதனோடு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இட்லி தட்டுகளில் வைத்து 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி சாஸ், சீரகத்தூள், சில்லி சாஸ் போட்டு சிறிது வெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

    * ஒரு பிரட் துண்டின் நடுவில் இந்த கோஸ் கலவையை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

    * முட்டைக்கோஸ் சாண்ட்விச் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×