search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான உலர்ந்த அத்திப்பழ சாலட்
    X

    சத்தான உலர்ந்த அத்திப்பழ சாலட்

    தினமும் 2 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று உலர்ந்த அத்திப்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் - 100 கிராம்,
    தேன் - 50 மி.லி.,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    கிராம்புத்தூள் - 1 சிட்டிகை.
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் ( விருப்பப்பட்டால்)



    செய்முறை :

    * உலர்ந்த அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ஒர பாத்திரத்தில் நறுக்கிய அத்திப்பழத்தை போட்டு அத்துடன் தேன், மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    * உலர்ந்த அத்திப்பழ சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×