search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான ஓட்ஸ் புட்டு செய்வது எப்படி
    X

    சத்தான சுவையான ஓட்ஸ் புட்டு செய்வது எப்படி

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஓட்ஸ் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இன்று ஒட்ஸ் வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 100 கிராம்,
    உப்பு - 1 சிட்டிகை,
    தேங்காய்த்துருவல் - 50 கிராம்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடித்த முந்திரி - 7,
    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
    உலர்ந்த திராட்சை - சிறிது,
    நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்,
    சூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    * ஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    * இட்லி பாத்திர தட்டில் ஓட்ஸை போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    * கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து, தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து பிரட்டவும்.

    * அடுத்து அதில் வெந்த ஓட்ஸை சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கலந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

    * சத்தான ஓட்ஸ் புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×