search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கோதுமை மாவு வாழைப்பழ பேன் கேக்
    X

    சத்தான கோதுமை மாவு வாழைப்பழ பேன் கேக்

    குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு கொடுக்க விரும்பினால் இந்த கோதுமை மாவு வாழைப்பழ பேன் கேக் செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்
    கோதுமை மாவு - கால் கப்
    வாழைப்பழம் - 1
    தயிர் - அரை கப்
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவைக்கு
    வெல்லம் - தேவைக்கு
    தண்ணீர் - சிறிதளவு
    சுக்கு தூள் - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    * வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

    * குதிரைவாலி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    * ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துளாக்கிய வெல்லத்தை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேன் பதத்தில் பாகு வந்தவுடன் அதில் சுக்கு தூளை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து அத்துடன் குதிரைவாலி அரிசி மாவை கலக்கவும்.

    * அடுத்து அதில் பிசைந்து வைத்த வாழைப்பழக் கூழ், தயிர் சேர்த்து கலக்கவும்.

    * அரை மணி நேரம் கழித்து சமையல் சோடா சேர்த்து மாவை கலக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சிறு தோசைகளாக வார்த்து எடுத்து கொள்ளவும்.

    * இப்போது தோசை மேல் வெல்லப்பாகை ஊற்றி பரிமாறவும்.

    * சூப்பரான சத்தான கோதுமை மாவு வாழைப்பழ பேன் கேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×