search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளி தொல்லைக்கு ஓமம் - கற்பூரவல்லி இலை சூப்
    X

    சளி தொல்லைக்கு ஓமம் - கற்பூரவல்லி இலை சூப்

    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஓமம் - கற்பூரவல்லி இலை சூப் குடிக்கலாம். இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலை - 10,
    ஓமம் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    தனியா - 2 டீஸ்பூன்,
    மிளகு - 4 எண்ணிக்கை,
    சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 4 பல்,
    சோம்பு - சிறிது (தேவைப்பட்டால்),
    உப்பு - தேவைக்கு,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    வெற்றிலை - 4,
    நெய் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    * கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

    * மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    * நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

    * ஓமம் - கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×