search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம்
    X

    சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம்

    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - 2 கப்
    மிளகு - 3 டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
    முந்திரிப்பருப்பு - சிறிது
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

    * வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.

    * சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.

    கவனிக்க:  அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×