search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் தினை - உருளைக்கிழங்கு கட்லெட்
    X

    சத்தான ஸ்நாக்ஸ் தினை - உருளைக்கிழங்கு கட்லெட்

    சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை, உருளைக்கிழங்கை வைத்து சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2,
    தினை அரிசி - ஒரு கப்,
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    கேரட் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.



    செய்முறை :

    * தினை அரிசியை வேகவைத்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கு. பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

    * பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) வைக்கவும்.

    * தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார்.

    * தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×