search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி
    X

    வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி

    வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 200 கிராம்,
    பூண்டு - 10 பல்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு , எண்ணெய் - தேவையான அளவு,
    உளுந்து - அரை தேக்கரண்டி,
    இஞ்சி - சிறிய துண்டு, கடுகு,
    கறிவேப்பிலை - தேவையான அளவு.



    செய்முறை :

    * மிக்சியில் வேர்க்கடலை, பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு கெட்டி சட்னி பதத்தில் அரைக்க வேண்டும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, உளுந்து, கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    * சத்து நிறைந்த வேர்க்கடலை துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×