search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஜவ்வரிசி - மோர் கஞ்சி
    X

    சத்தான ஜவ்வரிசி - மோர் கஞ்சி

    ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இன்று ஜவ்வரிசி - மோர் கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நைலான் ஜவ்வரிசி - அரை கப்,
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
    கடைந்த மோர் - அரை கப்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    * கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

    * குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

    * விசில் போனவுடன் இறக்கிவைத்து… கடைந்த மோர், உப்பு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    * சத்தான ஜவ்வரிசி - மோர் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×