search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்
    X

    சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்

    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :  

    பாசுமதி அரிசி - 1 கப்
    முருங்கைக்கீரை - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று
    பட்டை - ஒரு துண்டு,
    பிரிஞ்சி இலை - ஒன்று,
    கிராம்பு - 2,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    வெங்காயம் - சிறிய துண்டு.



    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

    * அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் ஊற்றி... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.

    * கீரை சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    * அடுத்து அதில் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

    * சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×