search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அஜீரண பிரச்சனையை குணமாக்கும் வெந்தயத் துவையல்
    X

    அஜீரண பிரச்சனையை குணமாக்கும் வெந்தயத் துவையல்

    வயிற்றுக் கடுப்பு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் வெந்தயத்தை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். இன்று வெந்தயத்தை வைத்து துவையல் செய்யும் முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
    சிகப்பு மிளகாய் - 7
    புளி - நெல்லிக்காயளவு
    வெல்லம் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - வதக்க, மற்றும் சாதத்தில் விட்டு சாப்பிட
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    * வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்து‌வி‌ட்டா‌ல் கசந்துவிடு‌ம். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.

    * பு‌ளியை த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். கா‌ய்‌ந்த ‌மிளகாயையு‌ம் எ‌ண்ணெ‌யி‌ல் போ‌ட்டு வதக்கிக்கொ‌ள்ளவு‌ம்.

    ‌* மி‌க்‌சி‌யி‌ல் அ‌ல்லது அ‌ம்‌மி‌யி‌ல் வெ‌ந்தய‌த்துட‌ன், ஊறவைத்த புளி, உப்பு, கா‌ய்‌ந்தமிளகாய் சேர்த்து `மை' போல அரைக்கவும்.

    * கடைசியாக ‌சி‌றிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

    * வெ‌ந்தய‌த் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்ப சே‌ர்‌த்து கல‌ந்து சாப்பி‌ட்டா‌ல் ரு‌சியாக இரு‌க்கு‌ம்.

    * இ‌ந்த துவையலை சா‌ப்‌பி‌ட்டா‌ல் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×