search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழைத்தண்டு - முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
    X

    வாழைத்தண்டு - முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

    வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து செய்யும் இந்த சாலட்டை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட உகந்தது. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - 50 கிராம்
    முளைகட்டிய பச்சைப் பயறு - 2 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
    மிளகு தூள் - தேவைக்கு
    கொத்தமல்லித்தழை - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விட்டு வேக வைத்து கொள்ளவும்.

    * முளைகட்டிய பச்சைப் பயறை வேக வைத்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.

    * சத்து நிறைந்த வாழைத்தண்டு - முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×