search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த டிபன் கீரைப் பணியாரம்
    X

    சத்து நிறைந்த டிபன் கீரைப் பணியாரம்

    சிலருக்கு கீரை பிடிக்காது. அவர்களுக்கு கீரையை வைத்து இவ்வாறு பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை -  ஒரு கட்டு
    தோசை மாவு - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கடலைப்பருப்பு, உளுதந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * சிறுகீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் கீரை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்.

    * தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

    * சத்து நிறைந்த கீரைப் பணியாரம் ரெடி.

    குறிப்பு :

    கீரையை வதக்காமல் பச்சையாக மிக்சியில் அரைத்து மாவில் கலந்தும் செய்யலாம். இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×