search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடையை குறைக்கும் வரகரசி - கொள்ளு அடை
    X

    உடல் எடையை குறைக்கும் வரகரசி - கொள்ளு அடை

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளவும் வேண்டும். இன்று வரகரசி, கொள்ளுவை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - 100 கிராம்,
    கொள்ளு - 25 கிராம்,
    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம்,
    காய்ந்த  மிளகாய் - 8,
    சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு,
    ஓமம் - சிறிதளவு,
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
    துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் - நறுக்கியது - ஒரு சிறிய கப்.
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :  

    * வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * ஊற வைத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    * 2 மணி நேரம் கழித்து நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சத்து நிறைந்த வரகரசி - கொள்ளு அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×