search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்
    X

    சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

    குழந்தைகளுக்கு கேழ்வரகை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குவதன் மூலம், அவர்கள் உடல்வலுவைப் பெறலாம். இன்று ராகி நூடுல்ஸ் வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி நூடுல்ஸ் - அரை பாக்கெட்,
    கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 1,
    பச்சைப்பட்டாணி - கைப்பிடி,
    பீன்ஸ் - 5,
    பூண்டு பல் - 2,
    இஞ்சித் துருவல், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    பிரியாணி இலை - 1, உப்பு  தேவையான அளவு.



    செய்முறை :

    * ராகி நூடுல்ஸை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (கேழ்வரகை வாங்கி முந்தைய நாள் ஊறவைத்து, முளைக்கட்டி காயவைத்து அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, இந்த மாவில் வெந்நீர் விட்டுப் பிசைந்து, இடியாப்பக் குழாயில் வைத்துப் பிழிந்து, ஆவியில் வேகவைத்து எடுத்துப் பயன்படுத்தலாம்.)

    * காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்த்து சூடானதும், காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பிரியாணி இலை சேர்க்கவும்.

    * அதனுடன் 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கி, காய்கறிகளை மசிக்கவும்.

    * அடுத்து அதில் மிளகு, சீரகத்தூள் சேர்க்கவும்.

    * விருப்பப்பட்டால் அரை டம்ளர் பால் சேர்க்கலாம்.

    * பரிமாறும் முன் வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    * ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் ரெடி.

    பலன்கள்:
    கேழ்வரகு, எடையைக் குறைக்க உதவும். தொப்பையைக் குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். எலும்பு, தசை உறுதிபடும். வயிறு நிரம்பியிருக்கும். இதனால் அதிக நேரம் பசிக்காது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×