search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை
    X

    சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களுக்கு இந்த சிவப்பரிசி - அவல் கொழுக்கட்டை மிகவும் நல்லது. இன்று இந்த கொழுக்கட்டையின் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பரிசி - ஒரு கப்,
    துவரம்பருப்பு - அரை கப்,
    சிவப்பு அவல் - கால் கப்,  
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 6,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    * சிவப்பரிசி, துவரம்பருப்பு, சிவப்பு அவல், காய்ந்த மிளகாயை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து... அடைபதத்தில் கொரகொரப்பாக அரைக்கவும் (பாதி அரைபடும் போது தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்).

    * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

    * நன்றாக வெந்த பிறகு இறக்கவும்.

    * பிறகு, மாவை கொழுக்கட்டை போல பிடித்து, இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    * சத்து நிறைந்த சிவப்பரிசி - அவல் கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×