search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செரிமானப் பிரச்சனை குணமாக்கும் கறிவேப்பிலை சட்னி
    X

    செரிமானப் பிரச்சனை குணமாக்கும் கறிவேப்பிலை சட்னி

    செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளலாம். இன்று கறிவேப்பிலை வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கப்
    உளுந்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    பச்சை மிளகாய் - இரண்டு
    புளி - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)



    செய்முறை :

    * கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து ஆற விடவும்.

    * பிறகு, அதே கடாயில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

    * பிறகு, வறுத்த கறிவேப்பில்லை, வறுத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.

    * சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×