search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
    X

    சத்தான வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி

    வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி செய்து குடிக்கலாம். இப்போது இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 200 கிராம்
    பாசிப்பருப்பு - 50 கிராம்
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    தேங்காய்  - அரை மூடி
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 7 பல்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - 2 சிறியது
    பச்சை மிளகாய் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    புதினா இலை  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    * தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும்.

    * சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.

    * அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை சேர்த்துத் தாளித்த பின், பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும்.

    * இத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

    * ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும்.

    * இத்துடன் தேவையான அளவு உப்பு, வெந்தயம், பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

    * விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.

    * வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×