search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம்
    X

    சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம்

    நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி அரிசி இதயத்துக்கு வலு சேர்க்கும். குதிரைவாலி அரிசியில் சுவையான சத்தான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1/2 கப்
    தினை  - 1/2  கப்
    உளுந்தம்பருப்பு  - 1/2 கப்
    வெங்காயம் - 1 சிறியது
    காய்ந்த மிளகாய் - 4
    கேரட் - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    தாளிக்க :

    கடுகு,
    உளுந்தம் பருப்பு,
    சீரகம்,
    சுக்கு,
    பெருங்காயம்,
    கறிவேப்பிலை,
    கொத்துமல்லி



    செய்முறை :

    * குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் ஊறவைத்த பின் இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    * பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த  மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * அடுத்து துருவிய கேரட்டை போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும்.

    * பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×