search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெண்டைக்காய் - ஓமம் மோர்க் குழம்பு
    X

    வெண்டைக்காய் - ஓமம் மோர்க் குழம்பு

    வெயிலுக்கு மோர் குழம்பு சாப்பிட சூப்பராக இருக்கும். மோர் குழம்பு செய்யும் போது அதில் ஓமம் சேர்த்து செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10,
    சிறிது புளிப்பு உள்ள மோர் - அரை லிட்டர்,
    ஓமம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    கடுகு - சிறிதளவு,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * ஓமம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

    * அரைத்த விழுதை மோருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

    * வெண்டைக் காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும்.

    * இதை மோர் கலவையுடன் கலந்து, லேசாக சூடாக்கி, கொதிக்க ஆரம்பித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

    * சூப்பரான வெண்டைக்காய் - ஓமம் மோர்க் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×