search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்
    X

    சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

    எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். சாமை அரிசியை வைத்து சத்து நிறைந்த மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 500 கிராம்,
    பாசிப்பருப்பு - 250 கிராம்,
    இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி,
    நெய் - 2 மேசைக்கரண்டி,
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    முந்திரி - 10 கிராம்,
    சீரகம் - 2 தேக்கரண்டி,
    மிளகு - 3 தேக்கரண்டி,
    கல் உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை அரிசியை கல் அரித்த பின் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    * குக்கரில் ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.

    * கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்து வேகவைத்த சாமையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * சுவையான சாமை மிளகு பொங்கல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×